உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 26, 2024) ஒருவரி ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்.
மிதுனம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். மன நிம்மதி பிறக்கும். நவீன மின்னணு பொருட்கள் வாங்குவீர்.
சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கும்.
கன்னி: தம்பதிக்குள் நிம்மதியுண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
தனுசு: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையை நினைத்து நிம்மதி இழப்பீர்.
மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.
கும்பம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர், பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும்.
மீனம்: தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)
+ There are no comments
Add yours