உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 27, 2024) ஒருவரி ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்.
ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பூர்வீகவீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்.
கடகம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். வீண் பயம், கவலை வரும்.
சிம்மம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்.
கன்னி: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும்.
துலாம்: வெளிவட்டாத்தில் மதிப்பு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவீர்.
விருச்சிகம்: அடிமனதிலிருந்த பயம் நீங்கி, துணிச்சலாக முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள்.
தனுசு: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்துகொள்வர். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.
மகரம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கும்பம்: அதிரடி திட்டங்கள் தீட்டுவீர். பணவரவு திருப்தி தரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும்.
மீனம்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)
+ There are no comments
Add yours