ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2023 உலகக் கோப்பை முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு நவம்பர் 23 (இன்று) முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடுகிறது. உலகக் கோப்பையில் விளையாடிய ரோஹித் சர்மா, விராட் கோலி உட்பட பல வீரர்கள் இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறவில்லை. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி 2 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக இருப்பார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்..
இந்திய அணி :
ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா :
மேத்யூ வேட் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா.
+ There are no comments
Add yours