ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் பரிசு என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்திருக்கிறது.
+ There are no comments
Add yours