மும்பை: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடவில்லை. வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி உள்ளது. இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இந்தப் போட்டியில் விளையாடவில்லை. உடல்நலக் கோளாறு காரணமாக அவர் விளையாடவில்லை என டாஸின் போது கேப்டன் ரோகித் சர்மா உறுதி செய்தார். பும்ராவுக்கு வைரஸ் காய்ச்சல் என பிசிசிஐ-யும் உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
சான்ட்னர் விளையாடவில்லை: புனே டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய மிட்செல் சான்ட்னர், தசை பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் விளையாடவில்லை.
+ There are no comments
Add yours