நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் பயிற்சியை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்துள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22 முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இந்த தொடர் ஆரம்பிக்க இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில் போட்டியில் களமிறங்க ஈர்க்கும் 10 அணியின் வீரர்கள் தங்களுக்கான பயிற்சியை தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு நேற்று சென்னை வந்தடைந்துள்ளனர் .
முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி எப்போது வரவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் சரிவர தெரிவிக்கப்படவில்லை .
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours