இந்தியா இல்லாமல் நடக்கிறதா சாம்பியன்ஸ் டிராபி ?

Spread the love

லாகூர் : 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீர்ந்த பாடு இல்லை. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டு இருக்கிறது.
தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருக்கும் அணி இந்த தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா தவிர மற்ற அனைத்து அணிகளும் இந்த தொடரில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தாங்கள் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது. ஹைபிரிட் மாடல் படி இந்தியா விளையாடும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது.

எனினும் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரையே தாங்கள் நடத்த மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இந்த சூழலில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி புதிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதில் தங்கள் நாட்டில் ஏன் இந்தியா வந்து விளையாட ஒப்புதல் கொள்ளவில்லை என்பது குறித்து ஐசிசி இடம் கேள்வியை கேட்டு கடிதம் எழுதி இருக்கின்றோம். அதற்கு இன்னும் இந்தியா, ஐசிசி தரப்பில் இருந்து பதில் வரவில்லை. மற்ற அணிகள் வந்து விளையாட ஒப்புதல் தெரிவித்த நிலையில் இந்தியாவுக்கு மட்டும் என்ன பிரச்சனை? அப்படி ஏதேனும் இருந்தால் அது குறித்து எங்களிடம் தனிப்பட்ட முறையில் பிசிசிஐ பேச வேண்டும்.

நாங்கள் இந்தியாவிடம் இருந்து நல்ல பதிலையே எதிர்பார்க்கின்றோம். அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது. ஒருவேளை ஹைப்ரீட் மாடலில் தான் போட்டியை நடத்த வேண்டும் என்று கூறினால் பாகிஸ்தானின் பெருமை தான் எங்களுக்கு முக்கியம். இந்தியா இல்லாமல் போட்டிகளை நடத்துவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு அதற்கு ஐசிசி தான் பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று ஐசிசி உலக நாடுகள் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியத்திற்கும் சேர்த்து பணியாற்ற வேண்டும். தங்களுடைய நம்பகத்தன்மையை icc இழந்து விடக்கூடாது என்று மோசின் நக்வி கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் நடத்தக்கூடாது என பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மொசின் நக்வி, நாங்கள் எதையும் ரத்து செய்யவில்லை. கோப்பை அறிமுக நிகழ்ச்சி அட்டவணையை மாற்றி வைத்திருக்கிறோம் என்று பதில் அளித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours