கோலியும், பும்ராவும் எங்களிடமிருந்து ஆட்டத்தை தட்டி பறித்து விடுவார்கள்: பாக் வீரர் பவாத் ஆலம்.

Spread the love

இஸ்லாமாபாத்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் கோலியும், பும்ராவும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவர்கள் என பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை இருநாட்டு ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

“விராட் கோலி மற்றும் பும்ரா என இருவரும் தங்களது அனுபவத்தின் மூலம் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துவார்கள். அதற்கு அவர்களது ஆட்டத்திறனும் காரணம். அதனால் ஆட்டத்தை எங்களிடமிருந்து எளிதில் தட்டிப் பறித்துவிடும் வல்லமை அவர்களிடம் உள்ளது. அது மட்டுமல்லாது ஒரு அணியாகாவும் இந்தியா வலுவாக உள்ளது. அதனால் அவர்களை வெல்வது சவாலாக இருக்கும்.

இருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக முகமது ஆமிர் மற்றும் கேப்டன் பாபர் அஸம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிரான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த ஆட்டத்தின் தாக்கம் இந்தியாவுக்கு எதிராகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தத்தில் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை நாம் பார்க்கலாம்” என ஃபவாத் ஆலம் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours