நீரஜ் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்; பாரிஸ் ஒலிம்பிக் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.. என்று ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் பெஸ்ட் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவை மீண்டும் பெருமையடையச் செய்துள்ளீர்கள்.. நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்; பாரிஸ் ஒலிம்பிக் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.. என்று நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours