மும்பை: புரோ கபடி லீக்கின் 11-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இம்முறை கேரவன் பார்மட்டில் ஹைதராபாத், நொய்டா, புனே ஆகிய 3 நகரங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்ட போட்டி அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2-வது கட்ட போட்டி நவம்பர் 10-ம் தேதி முதல் நொய்டாவில் நடைபெறுகிறது. 3-வது கட்ட போட்டி டிசம்பர் 3-ம் தேதி புனேவில் தொடங்கி நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் தேதியும், இடங்களும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours