நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசிசெலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 29) கடந்த29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட்மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 32) கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாகஉயிரிழந்தார்கள். சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண வுதவி வழங்கமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவனத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த நிலையில், நீலகிரியில் 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. இரண்டு பேரை தாக்கிகொன்ற அந்த சிறுத்தை மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி வளைத்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையைபிடித்தனர். இதனால் பந்தலூர் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.