நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
மக்களவை மற்றும் மாநிலத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பது, நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு, கூடுதல் நிதி செலவாவதையும் கட்டுப்படுத்தும்.
இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், இது சிறந்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் ஜனநாயக பங்கேற்புக்கு வழிவகுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அமைக்கப்படும் என நம்புவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இதே திட்டத்துக்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசும் பொருளாக வலம் வருகிறது.
+ There are no comments
Add yours