கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளார்கள் என்பதற்காக, தமிழகத்தில் தடை செய்ய முடியாது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார.
சைவ பிரியர்களின் பேவரைட் புட் லிஸ்டில் கோபி மஞ்சூரியன் முக்கிய இடத்தில் உள்ளது. இதில், சுவையைகூட்டுவதற்காக சேர்க்கப்படும் மசாலாக்களும், பார்வைக்காக சேர்க்கப்படும் செயற்கை நிறங்களும் உயிருக்குஆபத்தானவை என்று புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து கோவாவில் நடந்த ஆய்வில், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் சோப்புக்கொட்டை பொடி மற்றும்தரமற்ற சாஸ் வகைகளை பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து கோபி மஞ்சூரியனுக்கு கோவா அரசுதடைவிதித்தது. கோவாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கோபி மஞ்சூரியனுக்கு, கடந்த 11ம் தேதி தடைவிதிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரோடமைன்–பி நிறமூட்டி கலந்த பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. தற்போது கோபி மஞ்சூரியனுக்குகர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, உணவு பொருட்களில் ரோடமைன்–பி செயற்கைநிறமூட்டிகள் கலக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், தமிழகத்திலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்படுமா என்று மக்களிடையே கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உடலுக்கு ஆபத்து ஏற்படும் உணவுகளைஆய்வு செய்து தடை விதிப்போம். ஆனால், கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளார்கள்என்பதற்காக, தமிழகத்தில் தடை செய்ய முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
+ There are no comments
Add yours