அதிமுகவின் மதிப்பு தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை – ஆர்.பி. உதயகுமார்!

Spread the love

அதிமுகவின் மதிப்பு தெரியாமல் லேகியம் விற்பவர் போல அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை பாராட்டும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீரர்களுக்கு மதுரையில் பொன்னாடை அணிவித்துக் கவுரவித்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததுள்ளது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,” ஓ. பன்னீர்செல்வத்திற்கு மனக் குழப்பம் உள்ளது. அவருக்கு மூளை குழம்பியுள்ளது. அவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர். பாவம், திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அதிர்ச்சிக்குள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார்” என்றார். கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு,” அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. அண்ணாவை, அம்மாவைப் பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. இயக்கத்தின் மதிப்பீடு அவருக்குத் தெரியவில்லை. கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை. தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அதிமுகவைத் தொட்டுப்பார்க்க முடியாது. பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியைக் கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும். கட்சிக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours