மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக, அதிமுக கட்சிகள் இன்று நேர்காணல் நடத்துகின்றன.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தவுள்ளார். அப்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முதல்வர் கேட்கவுள்ளார்.
இன்றும், நாளையும்: அதேபோல், மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் சுமார் 2,500 விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்றும், நாளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நேர்காணல் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று திருவள்ளூர் (தனி ), வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, பெரும்பத்தூர்,
காஞ்சிபுரம் ( தனி ) , அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ( தனி ), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ( தனி ) மற்றும் கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.
நாளை பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ( தனி ) , மயிலாடுதுறை, நாகை ( தனி ), தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி) , கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது.
+ There are no comments
Add yours