திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 ஆடுகள்…!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவமனை மருந்தக மைதானத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 100 ஆடுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சர்வன் குமார் திருநங்கைகளுக்கு வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் 2017 மற்றும் 2018 கீழ் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 100 ஆடுகள் ரூபாய் 7 லட்சத்து 77 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் 10 திருநங்கைகளுக்கு தலா 10 ஆடுகள் வீதம் மொத்தம் 100 ஆடுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருநங்கைகளுக்கு வழங்கி இதன் மூலமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours