வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.5ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்கள் ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டும், மாற்றம் செய்யப்படும் வருகிறது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை 144 ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை – கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பான்மையான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, மதுரை நிஜாமுதீன், சென்னை – அகமதாபாத், மதுரை – சண்டிகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவிரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எஸ்பிரஸ், ஐதராபாத் எஸ்பிரஸ் உட்பட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக நாளை முதல் டிச.6 வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours