குல்பி ஐஸ் சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

Spread the love

விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 பள்ளி சிறுவர், சிறுமிகள் உட்பட 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட 50 குழந்தைகள் உட்பட 85 பேர், வாந்தி மற்றும் வயிற்று வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே உள்ளது முட்டத்தூர் கிராமம். இந்த பகுதியில் ஒருவர் தினமும் வழக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்து குல்பி ஐஸ் விற்று வருகிறார். அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிடுவது வழக்கம். நேற்றும் அவரிடம் குழந்தைகள் பலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

மாலையில் குல்பி ஐஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு இரவு 10 மணி அளவில் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிறுவர்கள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஒவ்வொரு குழந்தையாக அடுத்தடுத்து 3 வயது முதல் 15 வயது வரை உள்ள 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இது குறித்த விசாரணையிலும் ஈடுபட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours