99% வாக்குறுதிகள் நிறைவேற்றம்.. முதலமைச்சர் உரை!

Spread the love

சென்னை மயிலாப்பூரில் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவரது உரையில், சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் இயற்றியது திமுக அரசு. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று தந்தது திமுக அரசு. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் கட்சிதான் திமுக. உள்ளாட்சி தேர்தல், மிகப்பெரிய வெற்றி பெற்றோம்.

தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு தொடர்ச்சியான வெற்றியை தந்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். தற்போது நடந்த இடைத்தேர்தலிலும் இந்தியா கூட்டணி தான் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டன என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.

இதனிடையே பேசிய முதல்வர், தேர்தலின்போது திமுக அளித்த 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 100க்கு 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் ஆண்டு காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்கிறேன்.

ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மட்டுமின்றி, விடியல் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், கொரோனா பரவலை தடுக்க அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours