திடீரென சமூக சேவையில் இறங்கிய பிரபல நடிகை !

Spread the love

நடிகை ஆத்மிகா நேற்று வடபழனி முருகன் கோயிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும், விரைவில் சமூக தொண்டு நிறுவனம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆத்மிகா. ‘கலகத்தலைவன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளவர் தொடர்ச்சியாக சமூக சேவைகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று வடபழனி முருகன் கோயிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார்.

ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் நடிகை ஆத்மிகா…
ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் நடிகை ஆத்மிகா…
நடிகை ஆத்மிகாவிடம் இதைப்பற்றி கேட்டபோது, ”ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதும், கஷ்டத்தில் வாடும் உயிர்களுக்கு உதவுவதுமே ஆன்மிகத்தின் உச்சம். மேலும், சிறுவயதிலிருந்தே பொதுநல ஈடுபாடு எனக்கு அதிகம் உண்டு. விரைவில், சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, பல நற்காரியங்களில் ஈடுபட போகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

ஆத்மிகாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours