இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை பனையூர் பகுதி கிழக்கு கடற்கறை சாலையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை கடந்த ஞாயிற்று கிழமை நடத்தினார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசைக்கச்சேரி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் ரசிகர்கள் திரண்ட காரணாதாலும், காவல்துறைக்கு உரிய தகவல் தெறிக்கப்படாததாலும், இசை கச்சேரிக்கு வந்தவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லாமல், உரிய இருக்கைகள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் விட்ட காரணத்தை கருத்தில் கொண்டு, அந்த சமயம் பணியில் இருந்த உயர் காவல்துறை அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காவல்துறை தோல்வியே காரணம் என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பாக, இசை கச்சேரிக்கு போக்குவரத்துக்கு காவல்துறை உரிய முனிதிட்டமிடல் இல்லாமல் செயல்பட்டு விட்டது.
இதில், திமுக அரசின் காவல்துறை தோல்வி அடைந்ததை காட்டுகிறது. உரிய திட்டமிடல் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்காது என குறிப்பிடப்பிட்டு உள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பது வழங்கவில்லை.
திமுக பொறுப்பேற்ற கடந்த 28 மாதங்களாக தமிழகத்தில் உளவுத்துறை செயல்படாமல் இருக்கிறது. அதன் காரணமாக தான் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெபெற்று வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் 40 கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. போதை பொருட்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என ஆளும் திமுக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
+ There are no comments
Add yours