நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்ட நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன், தான் செய்த தவறுக்கு நேரில் வருத்தம் தெரிவித்ததன் அடிப்படையில், இன்று முதல் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்படவும், கட்சியின் அமைப்பு செயலாளராக பணியாற்றவும் அனுமதிக்கப்படுகிறார்.கட்சியினர் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours