மதுரை: மதுரையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த துணை முதல்வர் உதயநிதியை நடிகர் வடிவேலு நேற்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அக். 29-ம் தேதி துணை முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நேற்று முன்தினம் மதுரை வந்தார். அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த உதயநிதியை நடிகர் வடிவேலு நேற்று காலை சந்தித்தார்.
உதயநிதிக்கு பூங்கொத்து கொடுத்து துணை முதல்வரானதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, தங்கம் தென்னரசு மற்றும் பலர் உடனிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் உதயநிதியுடன் வடிவேலு பேசி னார். பின்னர் விருதுநகரில் நடந்த அரசு விழாவுக்கு உதயநிதி புறப் பட்டுச் சென்றார்.
+ There are no comments
Add yours