சென்னை: சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந்த அளவே உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதற்கு மத்தியில் நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆனதால், அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு நடிகை கஸ்தூரி, ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கஸ்தூரியை கைது செய்தனர். சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கஸ்தூரிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்பட்டுள்ளார். கஸ்தூரி நேற்று இரவு சிறையில் தூக்கமின்றி அவதிப்பட்டதாக சொல்லபடுகிறது. நேற்று பிற்பகலில் கஸ்தூரியை சிறைக்கு கொண்டு சென்ற போது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதைனைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதற்கு மத்தியில் நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆனதால், அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு நடிகை கஸ்தூரி, ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கஸ்தூரியை கைது செய்தனர். சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கஸ்தூரிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்பட்டுள்ளார். கஸ்தூரி நேற்று இரவு சிறையில் தூக்கமின்றி அவதிப்பட்டதாக சொல்லபடுகிறது. நேற்று பிற்பகலில் கஸ்தூரியை சிறைக்கு கொண்டு சென்ற போது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரிவினைவாத அரசியல்.. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு.. சட்ட நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
“பிரிவினைவாத அரசியல்.. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு.. சட்ட நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல் “
அதை அவர் சாப்பிடாமல் தவிர்த்து உள்ளார். இரவில் கலவை சாதம் வழங்கப்பட்டுள்ளது. அதை குறைந்த அளவு சாப்பிட்டுள்ளார். இன்று காலை பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. அதனையும் குறைந்த அளவே சாப்பிட்டதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது சக கைதிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரி, ஏ 1 வகுப்பில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்க வாய்ப்புள்ளது. இதற்கு அவர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும். ஜெயிலில் முதல் நாள் என்பதால் நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சக கைதிகளுடன் ஒரே ஹாலில் வைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார்.
+ There are no comments
Add yours