கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் AI டெக்னாலஜி பரவி வருகிறது என்பதும் மனித குலத்திற்கு சவால் விடும் வகையில் இருக்கும் இந்த AI டெக்னாலஜி தற்போது சினிமா துறையிலும் புகுந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக AI டெக்னாலஜியை பயன்படுத்தி பிரபல நடிகரை இளமையாக காட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெப்பன்’. குகன் சென்னியப்பன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சத்யராஜின் இளவயது காட்சிகள் சில இருப்பதை அடுத்து அந்த காட்சிகளை AI டெக்னாலஜி மூலம் படக்குழுவினர் உருவாக்கி வருவதாகவும் அனிமேஷனில் இந்த காட்சியை உருவாக்க பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில் AI டெக்னாலஜி மூலம் வெறும் 15 நாட்களில் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் முதல்முறையாக AI டெக்னாலஜி மூலம் ஒரு நடிகரின் வயதை குறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரான் இசையில் பிரபு ராகவ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours