கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மனைவியுடன் கலந்து கொண்ட ஆகாஷ் அம்பானி

Spread the love

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியி்ல், மனைவியுடன் மும்பை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி கலந்து கொண்டார்.

கோவை தொண்டாமுத்தூரை பூர்வீகமாக கொண்டு, தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ரவி – சித்ரா தம்பதியர். இவர்கள் அமெரிக்காவில் மருத்துவர்களாக உள்ளனர். இவர்களது மகள் நிக்கி. இவருக்கும், கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் புரந்தரதாஸ் மகனான கோகுல் தாஸ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தொண்டாமுத்தூர் அருகேயுள்ள பெருமாள் கோவில்பதியில் உள்ள தனியார் ரிசார்ட் வளாகத்தில் நேற்று (செப்.7) நடந்தது.

மேற்கண்ட திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மணமகன் கோகுல் தாஸின் நண்பரும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனுமான ஆகாஷ் அம்பானி நேற்று முன்தினம் மும்பையில் இருந்து கோவை வந்தார். தொடர்ந்து, சிறுவாணி பிரதான சாலை பேரூரை அடுத்த மத்திபாளையத்தில் உள்ள தனியார் ரிசார்ட் வளாகத்துக்குச் சென்று தங்கினர்.

அன்று மாலை பெருமாள்கோவில் பதியில் உள்ள ரிசார்ட் வளாகத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகெண்டார். அதைத் தொடர்ந்த மீண்டும் அன்று இரவு மத்திபாளையத்தில் உள்ள ரிசார்ட் வளாகத்தில் தங்கினார். தொடர்ந்து ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா இன்று (செப்.8) காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர், ஆகாஷ் அம்பானி, ஸ்லோகாமேத்தா தம்பதியர் இன்று தனியார் ரிசார்ட் வளாகத்தில் நடைபெற்ற கோகுல்தாஸ் – நிக்கி திருமண நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர், தம்பதியர் இன்று காலை ஈஷா யோகா மைய வளாகத்துக்குச் சென்றனர்.

ஆதியோகி சிலை, தியானலிங்கம், லிங்க பைரவி ஆகியவற்றை தரிசனம் செய்த அவர்கள், சந்திர குண்டம், சூரிய குண்டம் ஆகிய இடங்களையும் பார்வையிட்டனர். அதன் பின்னர், ஈஷா யோகா மையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். அதன் பின்னர், ஆகாஷ் அம்பானி – ஸ்லோகாமேத்தா தம்பதியர் இன்று மதியம் கோவையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours