அமரன் திரையரங்கில் குண்டு வீசியவர் கைது !

Spread the love

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ஓடும் நிலையில் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் 10 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் ‛அமரன்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் என்பது மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். ‘இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் : ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ என்ற புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த அம்சங்களை அடிப்படையாக வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கல்லூரி காலம் முதல் ராணுவத்தில் இணைந்து வீர மரணம் அடைந்தது வரையிலான மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரது காதல் மனைவியாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தான் ‛அமரன்’ திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பல தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் ஓடும் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டு என்பது வீசப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அமரன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தீவிரவாத தடுப்பு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தியேட்டர் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ரஹீம் என்றும், அவர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours