நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது, இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்றே கூறலாம்.
ட்ரைலர் முழுக்க காமெடி, நக்கல், 18 + என போர் அடிக்காமல் ஒரு வழக்கமான திரைப்படத்தை விட முற்றிலும் மாறுட்டு இருக்கிறது. ட்ரைலர் தொடக்கம் கார்த்தியின் குரலுடன் தொடங்குகிறது. வெல்வேறு காலகட்டங்களில் நடக்கும் பல கதாபாத்திரங்களில் இருவரும் கலக்கியுள்ளார்கள். ஒரு டைம் ட்ராவலர் படத்தின் கதை அமைந்துள்ளது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படத்தில் நடிகர் விஷால் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ட்ரைலரை பார்த்த பலரும் அருமை படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் எனவும், விஷால் சினிமா கேரியரில் இந்த படம் ரொம்பவே புதுசு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், இப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தவிர, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் விநாயக சதுர்த்தி அன்று (செப்டம்பர் 15) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரைக்கு வருகிறது.
+ There are no comments
Add yours