இயக்குனர் தங்கர் பச்சானின் ’கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் கண்டு ரசித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் படம் குறித்த அவரது கருத்தை தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ’கருமேகங்கள் கலைகின்றன’.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . வாவ் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது .
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் கண்டு ரசித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் படம் குறித்த அவரது கருத்தை தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் கூறிருப்பதாவது இயக்குனர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் ‘#கருமேகங்கள்கலைகின்றன’
திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும்.
இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது! என தனது ட்விட்டர் பதிவில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
+ There are no comments
Add yours