எச்.ஐ.வி சிகிச்சை அளிப்பதற்கு, ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை மையம் !

Spread the love

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எச்.ஐ.வி
தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிப்பதற்கு, ஏ.ஆர்.டி
கூட்டு மருத்துவ சிகிச்சை மையத்தை மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

5 இரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய இரத்த சுத்திகரிப்பு மையத்தைத் திறந்து வைத்ததுடன், நகர்ப்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத் திட்ட இயக்குநர் ஹரிஹரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours