குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கரடியால் கிராம மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீரை தேடி நகரப் பகுதிக்குள் கரடிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், குன்னூர் கரிமராஹட்டி பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று உணவை தேடி குடியிருப்பு அருகே வந்தது.
இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் கிராம மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளனர். எனவே, தொடர்ந்து கிராமத்திற்குள் வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+ There are no comments
Add yours