தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கமல் கண்ணன் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் குறித்து கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் மிகமோசமான முறையில் பதிவிடுபவர்கள் மீது திமுகவினர் அளிக்கும் புகாரின் பேரில், தமிழ்நாடு காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை வந்து சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அரசர்குளம் கமல் கண்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக திமுக மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அண்ணாதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கமல் கண்ணனை நாகுடி காவல் நிலைய போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours