காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம்.! மரம் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் ஊராருகே காட்டுப்பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று எரிந்து கொண்டு ஏரிந்து கொண்டுள்ளது. இதனை கண்ட ஊர் மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் விளாத்திகுளம் காவல் துறைக்கு காவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்டு இருந்த தீயை அணைத்தனர். அப்போது காவல் துறை சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக காரின் பின்பகுதி(டிக்கி பகுதி)யில் ஏதோ ஒன்று இருப்பது தெரிய வந்தது. பின்னர் அதனை திறந்து பார்க்கையில் அதில் சடலம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து யாரோ ஒருவர் காரினுடன் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது உறுதியானது. இதனை அடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்த நிலையில் உள்ள சடலத்தை ஆய்வு செய்தபோது அதில் கொல்லப்பட்டவர் ஆண் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அருகில் இருந்த செல்போன் , காரின் பதிவெண் TN 64 F 1584 ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர், காரில் எரித்து கொள்ளப்பட்டது ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் 48 வயதான நாகஜோதி என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில் நாகஜோதியை காணவில்லை என அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சமபவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் , சம்பவ இடத்தை ஆராய்ந்து பின்னர், நாகஜோதியை கொலை செய்த மர்ம கும்பலை கண்டறிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தற்போது கொலையாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours