காவிரி வழக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு !

Spread the love

காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிய வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையம் விரிவான பதிலை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறுவைப் பயிர்களுக்காக காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின்போது, 15 நாட்களுக்குத் தேவையான தண்ணீர் திறப்பு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் 28ம் தேதி இருமாநில கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வழக்கு வரும் செப்டம்பர் 1 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours