தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலத்தில் அதிகப்பட்சமாக நேற்று, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் கோவை சின்னக்கல்லாறில், 15 செ.மீ. மழை பெய்துள்ளது. திண்டுக்கல், வேடசந்துார், 11; பஞ்சப்பட்டி, 10; திருத்துறைப்பூண்டி, பெரியகுளம், 8; நாவலுார், பொன்னமராவதி, விருதுநகர், கும்பகோணம், நாமக்கல், 7; முசிறி, திருவிடைமருதுார், நிலக்கோட்டை, 6; பெரியகுளம், விரகனுார், மருங்காபுரி, துவாக்குடி, விருத்தாச்சலம், சமயபுரம், கள்ளந்திரி, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. வரும் நாட்களை பொறுத்தவரை, சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours