கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. @iVijayakant அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்திற்கு உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours