சென்னை: முதல்வரின் மருமகனும் அதானியும் சந்தித்திருக்கிறார்கள். உங்கள் மருமகன் சந்திக்கவே இல்லை என்று சட்டசபையில் கூற முடியுமா. அப்படி கூறுங்கள், நாங்கள் ஆதாரத்தை வெளியிடத் தயார் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அதானிக்கும் திமுக அரசுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது என்பதை தொடர்ந்து பேசி வருகிறோம். கடந்த ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது என்று சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் நேற்று சட்டசபையில் பேசும் போது, அதானியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் அபாண்ட குற்றச்சாட்டை சுமத்துவதாகக் கூறினார். ஆனால், எங்கேயும் முதல்வர் அதானியை சந்தித்தார் என்று நாங்கள் சொல்லவே இல்லை. அதானியை சந்திப்பது குற்றமே இல்லை.
முதல்வரின் மருமகனும் அதானியும் சந்திருக்கிறார்கள். உங்கள் சார்பில் அரசு அதிகாரிகளும், அதானி நிறுவன அதிகாரிகளை சந்தித்துள்ளார்கள். போன வாரமும் சந்திப்பு நடந்துள்ளது. உங்கள் மருமகன் சந்திப்பது நீங்கள் சந்தித்ததைப் போலத் தானே. உங்கள் மருமகன் சந்திக்கவே இல்லை என்று சட்டசபையில் கூற முடியுமா. அப்படி கூறுங்கள், நாங்கள் ஆதாரத்தை வெளியிடத் தயார்” என்று கூறினார்
+ There are no comments
Add yours