கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு இபிஎஸ், அண்ணாமலை ஆறுதல் !

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம். கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல்கண்ணன்,முகேஷ், ஆகாஷ் ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் .

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருநெல்வேலி, ராதாபுரம் தொகுதி, நாவலடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ராகுல், எட்டாம் வகுப்பு படிக்கும் முகேஷ் ஆகிய மூவரும் கடலில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி இறந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் பலியான மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதேபோல் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை பகுதியில், கடலில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், துரதிருஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தைகளைப் பிரிந்து வாடும் அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும்,மாணவர்கள், நீர் நிலைகளுக்குச் செல்லும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்றும், பெரியவர்கள் துணையின்றி, நீர் நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours