தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3,359 காவலர்களை பணிக்கு எடுக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது. செப்டம்பர் 17 வரை ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த 3,359 காலி பணியிடங்கள் 2ம் நிலை காவலர்கள், 2ம் நிலை ஜெயில் வார்டர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணியிடங்களை உள்ளடக்கியது.
இதற்கு தமிழக https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேல் வலது ஓரத்தில் மொழியை தமிழுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
பின்னர் முகப்பில் தெரியும் தேர்வு முறை செயல்பாடுகள் டேபை கிளிக் செய்து, அதன் கீழே வரும் பொதுத் தேர்வு என்ற பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும்.
காவலர் பணிக்கான தகுதி
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 26 வயது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 28 வயது
ஆதிதிராவிடர், திருநங்கைகள், பழங்குடியினருக்கு 31 வயது
ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது
முன்னாள் ராணுவத்தினருக்கு 47 வயது உச்ச வரம்பாக உள்ளது.
காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
தமிழ் மொழி எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடல்திறன் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ் மொழித் தகுதித் தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்கள், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிகளுக்கு 24 மதிப்பெண்கள், சிறப்பு மதிப்பெண்கள் 6 என மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும்.
உடல்திறன் போட்டியில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் இருக்கும்.
உடல் தகுதித் தேர்வில் ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
உடற்கூறு அளவு.
ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் நடைபெறும். குறைந்தப்பட்சம் 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.
பெண்கள் 159 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., இருக்க வேண்டும்.
விரிந்த நிலையில் 5 செ.மீ., கூடி 86 செ.மீ., ஆக இருக்க வேண்டும்.
+ There are no comments
Add yours