தூத்துக்குடி அருகே பிளஸ் 2 படிக்கும் மாணவர், சக மாணவர்கள் இருவரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கீழமுடிமண் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று மதியம் இந்த பள்ளியின் பிளஸ் 2 மாணவர்களிடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் பசுவந்தனைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த ஒட்டப்பிடாரம் போலீஸார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மாணவர்களிடம் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை செய்தனர்.
அப்போது விசாரணையில், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் சக மாணவர்களை வெட்டியது தெரிய வந்தது.
+ There are no comments
Add yours