தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்’லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தளபதி 68’ அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்றா தகவலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,படத்தின் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்யின்‘தளபதி 68’ படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை தோனி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
+ There are no comments
Add yours