ஒடிசாவில் மின்னல் தாக்கிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பல நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட கடலோரப் பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒடிசாவின் 6 மாவட்டங்களில் பெய்த இந்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரியில் 2 பேரும், அங்குல்,பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours