490 தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை- அன்புமணி

Spread the love

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 490 வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. அதனால் மருத்துவர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது.

-அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை கொரட்டூரில்,ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேட்மிட்டன் விளையாடி போட்டியை தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி பேட்டி :

பேட்மிட்டன் விளையாட்டு இன்று இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புகள் மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து போலியோவை முற்றிலுமாக ஒழித்தோம். இன்று இந்தியா முழுவதும் போலியோ கிடையாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழ்நாட்டிலும் ஒரு சிறப்பான உள் விளையாட்டு அரங்கம் வேண்டும். குறிப்பாக சென்னையில் பேட்மிட்டனுக்கு என்று பன்னாட்டு தரத்தில் ஒரு மைதானம் அமைக்க வேண்டும். அவ்வாறு ஒரு உள் விளையாட்டு மைதானத்தை கட்டினால் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த எங்களுக்கு வசதியாக இருக்கும் தமிழ்நாடு பேட்மிட்டன் கழகத்தின் தலைவராகவும் இந்த கோரிக்கையை நான் வைக்கிறேன்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். சட்டங்கள் உள்ளது ஆனால் அமல்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கிறது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. அதன் காரணமாக வேலை பளு அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டில் தகுதியான மருத்துவர்கள் பலர் இருந்தும் அவர்களை அரசு பணியில் அமர்த்த அரசு தயங்குகிறது.

புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு தயங்குகிறது. காண்ட்ராக்ட் அடிப்படையில்  மட்டுமே பணிய அமர்த்துகிறார்கள்.அறிவிக்கப்படாத கொள்கை முடிவாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது ஆனால் தமிழகத்தில் செயல்படுத்த ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.

தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள் ஆனால் இந்த 57 ஆண்டுகளுக்குப் பிறகும் சென்னையின் நிலையை பாருங்கள்… மழைநீர் வடிகால் மற்றும் கட்டுமானங்கள் அமைக்காத காரணத்தால் மழைக்காலத்தில் சென்னை தத்தளிக்கிறது. இதுதான் வளர்ச்சியா இதுதான் திராவிட மாடலா?

வெளிநாடுகளில் மழை பெய்தால் தண்ணீர் நிற்காது பெய்யும் மழையை சேமிக்கும் முறையும், பயன்படுத்தும் முறையும்  வெளிநாடுகளில் உள்ளது. ஆனால் நமது ஊரில் மழைக்காலங்களில் மலேரியா டெங்கு என பலவிதமான நோய்களை அனுபவித்து வருகிறோம் மழையால் பல சிக்கல்களை அனுபவித்து வருகிறோம்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது ஆனால் அதில் 490 வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற வில்லை. கேட்டால் இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது என சொல்கிறார்கள். மீதமிருக்கக்கூடிய வாக்குறுதிகளை எப்போது செய்யப் போகிறீர்கள் என கேள்வி.

அரசு மருத்துவர்களாக இருந்தாலும் தனியார் மருத்துவர்கள் ஆக இருந்தாலும் மருத்துவர்கள் என்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுடைய அடிப்படையே மக்களை காப்பாற்றுவது தான். அதில் வேண்டுமென்றே சிகிச்சை கொடுக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் இருக்கலாமே தவிர நோயாளிகள் வந்தால் சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

வரும் நோயாளிகளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருத்துவர்கள் இருப்பார்கள். மருத்துவர்களை குறை சொல்வதில் அர்த்தமே கிடையாது.

ஒருவர் இறந்து விட்டால் அவர்களது உறவினர்களுக்கு சில ஆதங்கம் வலி இருக்கும் நிச்சயம் அது நியாயமானது தான். அதுபோன்று தவறு நடந்துள்ளதாக ஏதாவது புகார் வந்தால் அதை விசாரித்து அதன் பிறகு தான் முடிவுக்கு வரவேண்டும் யாரோ ஒருவர் சொல்வதை வைத்துக்கொண்டு மருத்துவர் தவறு செய்திருப்பார் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. 2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும் அந்த கூட்டணி ஆட்சியில் பாமக பங்கேற்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours