பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது 17-வது நாள் நடைபயணத்தை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தொடங்கினார். நீட் தேர்வு என்பது திமுகவினருக்கு மட்டும் எதிரி என்பதால், அதனை வைத்து அரசியல் செய்வதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டினார்.
என் மண் என் மக்கள் என்ற வாசகத்துடன் பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வரும் நிலையில் 17 வது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரையை துவங்கினார். இங்கு மூன்று நாள் பாத யாத்திரையை நடத்த திட்ட மிட்டுள்ள நிலையில் முதல் நாளில் தமிழக – கேரள எல்கையான களியக்காவிளை சந்திப்பில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பாத யாத்திரை துவங்கினார், இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தேசிய கொடியை ஏந்தி பாத யாத்திரையில் கலந்து கொண்டனர். அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாத யாத்திரையின் போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, நீட் தேர்வு என்பது திமுகவினருக்கு மட்டும் தான் எதிரி என்பதால், அதனை வைத்து அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
+ There are no comments
Add yours