கேரளாவில் தடம் பதித்த திமுக !

Spread the love

கேரளாவில் திமுகவின் எட்டாவது மாவட்ட கழக அலுவலகம் இன்று இடுக்கியில் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளாவிலும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகங்களை திறக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் திமுகவின் முதல் மாவட்ட கழக அலுவலகம் புனலூரில் திறக்கப்பட்டது. அதனையடுத்து கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் இரண்டாவது அலுவலகம் துவங்கப்பட்டது.

அதனையடுத்து கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கட்சி அலுவலகம் துவங்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவின் எட்டாவது மாவட்ட கழக அலுவலகமாக இடுக்கி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. இதனை திமுக தலைமை நிலைய செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி எஸ் முருகன் கொடியேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அம்மாநில திமுகவினர் சார்பில் பேரணியும் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரள மாநில திமுக சார்பில் 1000 பேருக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அடுத்த மாதம் திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் திமுக மாவட்ட அலுவலகம் துவங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன், கேரள மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரின்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours