உடல் நிலை பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம்… பிரேமலதா விஜயகாந்த் !

Spread the love

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71-ஆவது பிறந்த நாள் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த விஜயகாந்த்தை கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்ததால் தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.

பின்னர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் என்ற படத்தின் பெயர் மற்றும் முதற்கட்ட காட்சிகளை விஜயகாந்த் வெளியிட்டார். இதனை கண்ட தொண்டர்கள் ஆராவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுதினர்.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் 100 ஆண்டு காலம் நலமுடன் இருப்பார் என்று உருக்கமுடன் தெரிவித்தார். அவரது உடல் நிலை பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours