நடிகை விஜயலட்சுமி பின்னணியில் திராவிட கட்சிகள்!

Spread the love

நடிகை விஜயலட்சுமி பின்னணியில் திராவிட கட்சிகள் இருப்பதாகவும், ஏற்கெனவே இவர் இது போன்று 5 பேர் மீது புகார் அளித்ததாகவும் நாம் தமிழர் கட்சியின் மகளிரணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பில் இன்று நடிகை விஜயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா, நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பக்கூடிய நபர். தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி சீமான் மீது பொய்யான புகாரை விஜயலட்சுமி பரப்பி வருகிறார்.

விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கிலேயே சீமான் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். இதன் பிண்ணனியில் திராவிட கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது. 12 வருடங்கள் கழித்து பொய்யான புகாரை அளிக்கும் விஜயலட்சுமி ஒரு பெண் என்பதால் சீமான் பொறுமையாக இருப்பதாகவும் ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி பல ஆண்கள் மீது புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இதனை தொழிலாகவே அவர் செய்து வருகிறார். நடிகை விஜயலட்சுமியிடம் யார் யாரெல்லாம் பணம் கொடுத்து உள்ளனர் என்ற ஆதாரங்கள் தங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் பெலிக்ஸ், கடந்த 2011ம் ஆண்டு அளித்து விட்டு பின்னர் மீண்டும் 2023ம் ஆண்டு அதே புகாரை அளிக்கிறார். இதையெல்லாம் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாது. ஆர்டிவிசியல் இன்டலிஜென்ஸ் மூலமாக சீமானும், விஜயலட்சுமியும் ஒன்றாக இருப்பது போல புகைப்படத்தை உருவாக்கி இருக்கின்றனர். விஜயலட்சுமியுடன் சீமான் திருமணம் செய்து கொண்டது என்பது நடக்கவே இல்லை. 2011ல் போடப்பட்ட வழக்கு பொய்யான வழக்கு. அதனை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். யார் மீதும் புகார் கொடுக்கலாம், வழக்கும் பதிவு செய்யப்படலாம்.

ஆனால் நீதிமன்றம் தான் அதற்கு முறையாக தீர்ப்பு வழங்க வேண்டும். 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சுமி அவதூறு பரப்புகிறார். ஹரி நாடார் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்பதற்காக புகார் அளித்தவர் விஜயலட்சுமி. நடிகை விஜயலட்சுமி அளித்த பொய்யான புகாரில் காவல் ஆய்வாளர் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours