நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள காரணத்தால் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடுகள் குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து அதிமுக முக்கிய அங்கம் வகித்து வருகிறது.
இந்த சமயத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் அந்த சிறப்பு கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள், அதன் மீதான அதிமுக நிலைப்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours