இல்லாத எண்ணை வைத்து கடன் வாங்கியுள்ளதாக மோசடி !

Spread the love

பயன்படுத்தாத செல்போன் எண்ணை வைத்து கடன் எடுத்துள்ளதாக கூறி மோசடி செய்யும் நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு..!

சென்னை மைலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேமலதா, இவரது மகன் ரோகித்குமார், தனது தாயின் வீட்டு செலவிற்காக மாதம் 10 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்துவது வழக்கமாக கொண்டு இருப்பதாகவும் , கடந்த ஜூலை மாதம் தனது தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து பதினேழாயிரத்டு பதினேழு (17,017) ரூபாய் பணம் கடன் பெற்று உள்ளதாக வந்த குறுந்தகவலைடுத்து அருகில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று ரோஹித் முறையிட்டபோது உங்கள் மொபைலில் இருந்து தான் கடன் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஆனால் எனது தாயாருக்கு அதை எல்லாம் பயன்படுத்த தெரியாது எனக் கூறிய நிலையில் ரோகித் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் எங்கு சென்று போனாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என அவமரியாதையாக பேசி உள்ளனர். இதன்பின் ரோஹித் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் மயிலாப்பூர் துணை ஆணையர் விசாரணை நடைபெறும் என உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்ட போது, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து பிரேமலதா வங்கி கணக்கை மோசடி செய்து எவ்வித செயலும் இல்லாமல் பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக மீதமுள்ள பணத்தை அவரது வங்கி கணக்கில் அனுப்பி உள்ளனர். பொது மக்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கொடுப்பதாக கூறி பைனான்ஸ் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களின் வங்கி கணக்கையும் பெற்று கொண்டு, இது போன்று மோசடி ஈடுபட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே மயிலாப்பூர் துணை ஆணையர் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிஎஸ்ஆர் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், அந்த தனியார் நிறுவனம் எந்த வழக்கும் பதிவு மேற்கொள்ளாததால் இன்று மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்த இளைஞர் மீண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டார்.

மேலும் புகார் ஏற்ற இணை ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மீண்டும் துணை ஆணையரிடம் நடவடிக்கை எடுக்க சொல்வதாக உறுதி அளித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours