பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!

Spread the love

இந்தியா தலைமை தாங்கி நடத்தி வரும் இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டு, வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டையொட்டி விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், கனரக, நடுத்தர மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் இன்று இரவு 9 மணி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை டெல்லிக்குள் செல்ல அனுமதிக்கப்படாது. ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்சிகளுக்கும் இதே போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படும்.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உச்சிமாநாட்டின் முடிவில் செப்டம்பர் 10ம் தேதி மதிய உணவு வேலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours